பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதி உள்ளதா? முதலமைச்சர் கேள்வி!
நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிட்ஸ் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். மும்பையில் நடக்கவுள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்கி விட்டேன். பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் பற்றி பேச பிரதமர் நரேந்திர மோடிக்கு தகுதி உள்ளதா? தமிழ்நாட்டைக் காப்பாற்றி விட்டோம், வரும் தேர்தலில் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். உழவர்களுக்காக நாகையில் 50 இடங்களில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் நாகை எம்.பி. செல்வராஜ்.
பா.ஜ.க. ஆட்சியில் ஏழு விதமான ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.