விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா? மும்மொழிக் கொள்கை குறித்து வைரமுத்து ட்வீட்..!

மும்மொழிக் கொள்கை திணிப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
இந்தி என்ற மொழி
தன்னளவில் இயங்குவது
அதன் உரிமை
இன்னொரு
தேசிய இனத்தின்மீது
திணிக்கப்படும்போது
அது புல்லுருவிபோல்
உள்ளிருந்து
தாய்மொழியின்
உயிரை உறிஞ்சிவிடும்
இந்தியின்
ஆதிக்கம் அதிகமான
மராத்தி போன்ற மொழிகளுக்கு
நேர்ந்த கதி அதுதான்
தமிழுக்கும்
அது நேர்ந்துவிடக் கூடாது
என்றுதான்
மும்மொழிக் கொள்கையை
மும்முரமாய் எதிர்க்கிறோம்
மும்மொழிக் கொள்கையை
ஏற்றால்தான் நிதிதருவோம்
என்பது
விஷத்தைச் சாப்பிட்டால்தான்
சோறு போடுவோம்
என்பது போன்றது
ஏற்றுக்கொள்ள முடியாது
தமிழ்நாட்டு அரசின்
நிலைப்பாட்டோடு
தமிழர்கள் கெட்டியாக
ஒட்டி நிற்கிறார்கள்
அறிஞர் அண்ணாவும்
உடன் இருக்கிறார்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் கட்டாயமாக அமல்படுத்த முயற்சிக்கிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மத்திய அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில், அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரன், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது; எனவே நிதியை வழங்க மறுக்கிறோம் எனக் கூறியதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திரன் கூறிய இந்தக் கருத்துக்கு, தமிழ்நாட்டில் பாஜக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றன