பாமாயில் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா ?

பெரும்பாலும் கடைகள் மற்றும் பிளாட்பாரத்தில் விற்கும் உணவு பண்டங்கள் தின்பண்டங்கள் ஆகியவை பாமாயிலில் தான் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக பலமுறை பயன்படுத்திய எண்ணையை பயன்படுத்துவதால் அது விஷமாக மாறி உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பாமாயிலை வதக்குதல் வறுத்தல் போன்ற சின்ன சின்ன உணவு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் கெடுதல் இல்லை என்றும் ஆனால் அதிக அளவு பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு நல்லது.
அதிக வெப்பத்தில் சமைப்பதால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க, அதிக புகை புள்ளி கொண்ட எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவகாடோ எண்ணெய், பாமாயில், வேர்க்கடலை எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் போன்றவை பொரித்தல் மற்றும் வறுத்தலுக்கு ஏற்றவை.
எண்ணெய்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பல கடைகளில் அடிக்கடி இதைச் செய்கிறார்கள், இது டிரான்ஸ் ஃபேட் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களை உருவாக்குகிறது.
பாமாயில் குறைவாக பயன்படுத்தினால் பிரச்சனை இருக்காது. ஆனால் அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.