மரணம் இப்படி கூட வருமா ? பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி..!
ஆந்திராவை சேர்ந்தவர் ரவி. இவருக்கு 2 மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).
நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.
இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.