1. Home
  2. தமிழ்நாடு

திமுக அமைச்சருக்கு செருப்பு போட கூட ஒரு ஆள் வேண்டுமா..? வறுத்தெடுக்கும் பாஜக..!

1

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள்.
கடந்த சில நாட்களுக்கு  முன்பு அரசு பள்ளியில் மத போதை விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது சர்ச்சை கிளம்பிய நிலையில், திருவெற்றியூர் திமுக அமைச்சருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அரசு பள்ளி  மாணவிகள் வணங்கி பாராட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியது.


இந்நிலையில், திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு நிர்வாகி ஒருவர் செருப்பு மாட்டி விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் தானே செருப்பை கூட போட மாட்டாரோ? எனவும் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சது செருப்ப மாட்டி விடத்தானா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கடந்த ஆட்சியில அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தன் காலில் இருந்த செருப்பை சிறுவனை கழற்ற சொன்னது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது திமுக மூத்த அமைச்சர் கே.என். நேருவுக்கு நிர்வாகி ஒருவர் செருப்பை எடுத்து  மாட்டி விடுவது கடும் சர்ச்சையையும், கண்டனங்களையும்  கிளப்பியிருக்கிறது.


 

Trending News

Latest News

You May Like