1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா காட்சி முனை மூடல் - வனத்துறை அறிவிப்பு..!

1

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் விடுமுறையின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். அது மட்டுமல்லாமல் புதிதாக திருமணமான தம்பதிகளும் ஹனிமூனுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா காட்சி முனை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி- கோத்தகிரி சாலையில் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது தொட்டபெட்டா சிகரம். தென்னிந்தியாவில் உயரமான சிகரமாக தொட்டபெட்டா விளங்குகிறது. இதன் உயரம் 2637 மீட்டர் ஆகும். தொட்டபெட்டா என்ற வார்த்தை கன்னடமாகும். தொட்டபெட்டா என்றால் பெரிய மலை ஆகும். இந்த பகுதியை சுற்றி காடாக இருக்கும். இங்கு பல அரிய வகை மூலிகைகளும் இருக்கும். இங்கு இரு தொலைநோக்கிகள் உள்ளன. அதிலிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த தொட்டபெட்டாவுமே தெரியும்.

Trending News

Latest News

You May Like