அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியின் செயலால் அதிர்ந்த மருத்துவர்கள் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் ஏராளமானோர் சிறப்பு முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிறப்பு சிகிச்சை மையங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. எனினும் சென்னை, கோவை போன்ற ஒருசில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கிய காலத்தில், கொரோனா பாதித்த பலரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டனர். பலர் மருத்துவமனைகளில் இருந்து தப்பியோடினர். இதனால் மருத்துவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் மத்தியில் அச்சம் போக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்கொலைகள் குறைந்து தானாகவே முன்வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனா பாதித்த நபர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலை பொன்னுசாமி நகரைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க சந்திரவாசன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கொரோனா பாதித்து முதல் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையின் 3 வது தளத்தில் உள்ள கழிவறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அளித்த தகவலை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை மீட்ட சுகாதாரத்துறையினர் கொரோனா விதிமுறைகளோடு அடக்கம் செய்தனர்.
newstm.in