1. Home
  2. தமிழ்நாடு

லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி..!

1

தினமும் இரவில் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் பலர், செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே படுத்து தூங்குவார்கள். திடீரென இரவு நேரத்தில் ஏதாவது கால் வந்தாலோ அல்லது காலையில் கால் வந்தாலோ, செல்போனில் உள்ள வயரை பிடுங்காமல் அப்படியே செல்போனில் சார்ஜ் ஏறியபடியே பேசுவார்கள். அப்படி பேசும் போது, செல்போன் சார்ஜர் வயரில் மின்கசிவு ஏதாவது இருந்தால். அவர் மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்து போவார். இப்படி சமீப ஆண்டுகளில் பலர் இறந்து போயிருக்கிறார்கள். அதனால் தான் செல்போனில் சார்ஜ் போட்டபடி பேச வேண்டாம் என்றும், செல்போனை நீண்ட நேரம் சார்ஜ் போட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

செல்போனை போல் லேப்டாப்பும் சிக்கலானது. லேப்டாப்பில் சார்ஜ் போடும் ஸ்விட்சை ஆப் செய்துவிட்டு வயரை பிடுங்க வேண்டும். சில நேரங்களில் வயர்களில் மின் கசிவு ஏற்பட்டால் அது ஆளையே காலி செய்துவிடும்.. அப்படித்தான் கோவையைச் சேர்ந்த டாக்டருக்கு சென்னையில் நடந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா அண்மையில் கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்காக வந்துள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் தங்கியிருந்த சரணிதா, தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு பயன்படுத்த விரும்பியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டாக்டர் சரணிதா மீது வயரில் இருந்த மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியது. இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சார்ஜர் வயரை கையில் பிடித்தபடியே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது டாக்டர் சரணிதா சார்ஜர் வயரை கையில் பிடித்த படி இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like