விண்வெளிக்கு பயணம் செய்ய விருப்பமா ? டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ?
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028ம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “விண்வெளிக்கு பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2.35 கோடி முதல் 3.53 கோடி ரூபாய் வரை ஆகலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஒவ்வொரு முறையும் ஏழு பயணிகளை அழைத்துச் செல்லவும் 100 மணி நேரத்திற்கு ஒரு பயணம் வீதம் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுலா ராக்கெட்டில் 4 ஜன்னல்கள் கொண்ட அறை இருக்கும். இதில் 7 பேர் வரை பயணிக்க முடியும். ஒவ்வொரு 100 மணி நேரத்திற்கும் ஒரு ராக்கெட் சுற்றுலாவுக்கு என ஏவப்படும். மொத்தம் 10 ராக்கெட்கள் இருக்கின்றன. ஒரு பயணத்திற்கு ரூ.3.46 கோடி வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது சீன அறிவியல் அகாடமியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதியன்று விர்ஜின் கேலக்டிக் எனும் விண்வெளி சுற்றுலா நிறுவனம், முதல் முறையாக 4 விஞ்ஞானிகள் உட்பட 6 பேரை விண்வெளிக்கு அழைத்து சென்று பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. 75 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரை விண்வெளியில் இந்த 6 பேரும் பறந்திருக்கிறார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது.