1. Home
  2. தமிழ்நாடு

பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா ? பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..!

1

பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 15 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதுண்டு. இதற்காக சிறப்புப் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். இதில், ரயில் பயணத்திற்கு 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். 

Train

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் இன்று (செப். 13) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய இன்றும் , ஜனவரி 12-ம் தேதிக்கு நாளையும், ஜனவரி 13-ம் தேதிக்கு செப்டம்பர் 15-ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். எனவே, பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி 12-ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reservation

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், முன்கூட்டியே சிலர் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்றனர்.

Trending News

Latest News

You May Like