1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா ? இன்று சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்..!

1

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாகர்கோவில் தாம்பரம் இடையேயும், தாம்பரம் நாகர்கோவில் இடையேயும் தலா நான்கு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் நவம்பர் 5, 12, 19, 26 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் நவ 6,13, 20, 27 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு அன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பாட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு வந்து சேரும்.

இதேபோல் திங்கள்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக நாகர்கோவிலுக்கு இரவு 8.45 மணிக்கு சென்றடையும்.

நாகர்கோவில்- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று நவம்பர் 2ம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like