1. Home
  2. தமிழ்நாடு

வீடு கட்ட ஆசையா ? குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்க..!

1

7 பொதுத்துறை வங்கிகளின் ஹோம் லோன் வட்டி, காலம் ஆகியவற்றை பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

தற்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டுக் கடன்களில் 65 அடிப்படை புள்ளிகள் முதல் 75 அடிப்படை புள்ளிகள் வரை சலுகைகளை மார்ச் 31, 2024 வரை வழங்குகிறது.

இதனால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 8.50% இல் தொடங்குகின்றன. அதிகபட்ச விகிதம் 9.50% ஆகும். பிரச்சார விகிதங்கள் இல்லாமல், சாதாரண வீட்டுக் கடன் விகிதங்கள் 9.15% முதல் 9.65% வரை தொடங்குகின்றன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊதியம் பெறும் நபர்களுக்கு 8.40% முதல் 10.50% வரை வட்டி விகிதங்ளை வழங்குகிறது.

கனரா வங்கி

கனரா வங்கி, ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் கொள்கைக்கு முன்னதாக கனரா வங்கி தனது ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 9.25% ஆக சமீபத்தில் திருத்தியது.

தற்போது, வீட்டுக் கடன்களுக்கான வங்கியின் வட்டி விகிதங்கள் 8.40% முதல் 11.75% வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா, வீட்டுக் கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. 825க்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோருக்கு, பேங்க் ஆஃப் இந்தியா 8.30% வீதத்தை வழங்குகிறது.

அதே சமயம் 800 முதல் 824 வரையிலான கிரெடிட் ஸ்கோர்களுக்கு 8.40% வீதம் வழங்குகிறது. 760 மற்றும் 799 இடையேயான சிபில் ஸ்கோர்களுக்கு 8.60% வட்டி விதிக்கிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 800 மற்றும் அதற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதம் 8.35% ஆகும். அதே சமயம் 750 முதல் 799 வரை உள்ள கிரெடிட் மதிப்பெண்களுக்கு 8.50% ஆகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி, 800 மற்றும் அதற்கு மேல் சிபில் ஸ்கோர் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு ரூ. 30 லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு 8.90% வட்டியை நிர்ணயிக்கிறது. மேலும், 600 முதல் 750 மற்றும் அதற்கு மேல் இருந்தாலும் வட்டி விகிதம் 8.95% முதல் 10.50% வரை என நிர்ணயிக்கப்படுகிறது.

பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா மற்ற பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது வீட்டுக் கடன்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தை வழங்குகிறது.

825க்கு மேல் உள்ள கிரெடிட் ஸ்கோருக்கு, பேங்க் ஆஃப் இந்தியா 8.30% வீதத்தை வழங்குகிறது. தொடர்ந்து, 800 முதல் 824 வரையிலான கிரெடிட் ஸ்கோர்களுக்கு 8.40% வீதம் மற்றும் 760 மற்றும் 799 சிபில் ஸ்கோர்களுக்கு 8.60% சதவீதம் வட்டி விகிதத்தை விதிக்கிறது.

Trending News

Latest News

You May Like