1. Home
  2. தமிழ்நாடு

நோயில்லாம ஹெல்தியா இருக்கணுமா ? தினம் ஒரு டம்ளர் தனியா நீர் குடிங்க..!

1

நாம் தனியா விதைகளை ஊறவைத்து நீராக அருந்துவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தனியா விதையில் உள்ள பண்புகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரல் செயல்பாட்டை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையை சீராக்க உதவுகிறது. தனியா விதைகளில் உள்ள பண்புகள் நமது உடலில் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. எனவே தினசரி நீங்கள் தனியா விதைகளை ஊறவைத்து அருந்துவதன் மூலம் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும்

மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அதனை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக பெண்கள் மன அழுத்த பிரச்சனைகள் அதிகம் எதிர்கொள்கிறார்கள் இதற்கு தனியா விதைகளில் உள்ள பண்புகள் உதவுகிறது. இது நமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை குறைத்து, அமைதியை பெறுவதற்கு தனியா விதைகளில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடல் ஆனது சற்று தளர்ந்து வலிமை இழந்து காணப்படும். மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படும் வலிகளை சரி செய்வதற்கு தனியா விதையில் உள்ள பண்புகள் உதவுகின்றன. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வீக்கம் போன்றவற்றை சரிசெய்ய தனியாவில் உள்ள பண்புகள் உதவி செய்கின்றன. அதே நேரத்தில் மாதவிடாய் இரத்தப்போக்கு சீராக நடைபெறுவதற்கு கொத்துமல்லி விதைகளில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவை சமநிலைப்படுத்துவதற்கு தனியா விதைகளில் உள்ள பண்புகள் உதவுகின்றன. மேலும் பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு இது உதவுகிறது. உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்வதால் தைராய்டு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தனியா விதைகளில் உள்ள பண்புகள் இந்த கொலஸ்ட்ராலின் அளவை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பண்புகள் ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

தனியா விதைகளில் உள்ள பண்புகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக இந்த கொத்துமல்லி விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய எண்ணெய்களின் பண்புகளும் நிறைந்துள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான நொதிகளின் சுரப்பை தூண்ட உதவுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவானது துண்டுகளாக உடைக்கப்பட்டு முழுமையாக நமது உடலில் உறிஞ்சப்படுகிறது. மேலும் நமது உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் தனியா விதைகளில் உள்ள பண்புகள் உதவுகின்றன. இதனால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிக எளிமையாக நமது உடலில் உறிஞ்சப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுத்தப்பட்டு நோய் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினசரி உங்கள் வழக்கத்தில் தனியா விதைகளை ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இது உடல் எடை நிர்வாகிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி பசி அதிகமாக ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதனால் தேவையற்ற நேரங்களில் அதிக உணவுகள் உட்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் பெண்களின் பொதுவாக ஏற்படும் நீர் பிடிப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான பண்புகள் இந்த கொத்தமல்லி விதைகளில் நிறைந்துள்ளன. எனவே தினசரி இரவு அதனை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்துவதன் மூலம் அதில் உள்ள நன்மைகளை நாம் எளிதில் பெற முடியும்.

தனியா விதைகளை ஊற வைத்து குடிக்கும் போது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க இது உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக காலை நேரத்தில் சோர்வு, குமட்டல் போன்ற பாதிப்புகள் இருக்கும். இவற்றை சரி செய்வதற்கும் இதில் உள்ள பண்புகள் உதவுகின்றன. பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு பால் சுரப்பு என்பது பிரச்சனையாக இருக்கலாம். பால் சுரப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு தனியா விதைகளில் உள்ள பண்புகள் உதவுகின்றன. தினசரி இந்த தனியா விதைகளை ஊற வைத்து குடிப்பது நன்மைகளைஅளிக்கும். எனினும் தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை இன்றி இதனை எடுக்க கூடாது.

தனியா விதைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உதவுகின்றன. மேலும் சூரிய ஒளியினால் சருமத்தில் ஏற்படும் கருமை நிறத்தை சரி செய்வதற்கு இதில் உள்ள பண்புகள் உதவுகின்றன.

இளமையிலேயே வயதானது போன்று தோற்றத்தை சிலர் பெற்று இருக்கலாம். இதற்கு காரணம் வறட்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். இந்த தனியா விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

தனியா விதைகளில் நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவும் வகையில் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களை குறைப்பதற்கு இதில் உள்ள பண்புகள் உதவுகின்றது. குறிப்பாக வயதானவர்களுக்கு மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இவற்றை சரி செய்வதற்கும் இதில் உள்ள பண்புகள் உதவுகின்றன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து நோய் எதிர்ப்பாற்றல் சீராக செயல்படவும் உதவுகிறது.

தனியா விதை தண்ணீர் தயாரிப்பு முறை!

  • ஒரு டீஸ்பூன் தனியா விதைகளை எடுத்து முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அந்த நீரை அருந்தலாம்.
  • மற்றொரு முறையாக கொதிக்கின்ற நீரில் தனியா விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின்னர் அந்த நீரை அருந்தலாம்.
  • ப்ளாக் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் டீ தூள் போடுவதற்கு முன்பு தனியா விதைகளை போட்டு கொதிக்க விட்டு பின்னர் டீத்தூள் போட்டு இறக்கி அந்த நீரை அருந்தலாம்.
  • சுவைக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.


கவனிக்க
நீங்கள் வேறு ஏதேனும் நோய்க்காக மருந்து அல்லது மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் மருத்துவரின் ஆலோசனையின்றி தனியாநீரை அருந்தக்கூடாது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த தனியா நீரை அருந்தியப்பிறகு ஒவ்வாமைகள் ஏதேனும் எதிர்கொண்டால் இதனை அருந்துவதை தவிர்க்கவும்.

Trending News

Latest News

You May Like