1. Home
  2. தமிழ்நாடு

மாதா மாதம் ரூ.36,000 வேணுமா ? அதுவும் ஆயுளுக்கும்..! இந்த ஒரே பாலிசி போதும்...!!

1

 லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பல பாலிசி திட்டங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் எல்ஐசி செயல்படுத்தி வரும் சூப்பரான திட்டமாக ஜீவன் உமாங் பாலிசி உள்ளது. இந்த திட்டம் முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்த பாலிசியின் முடிவுக்கு பிறகு மொத்த தொகையும் கையில் கிடைக்கும். அத்துடன் இந்த பாலிசியின் முதிர்வு காலம் வரை பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த பாலிசியை பிறந்த குழந்தைக்கு கூட எடுக்க முடியும்.LIC ஜீவன் உமாங் திட்டத்திற்கு 90 நாட்கள் குழந்தை முதல் 55 வயது பெரியவர் வரை தகுதி பெறுகிறார்கள். 

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக இந்த பாலிசிக்கு ரூ. 2 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைகள் வளரும் போதே சிறந்த வருமானத்தை இந்த பாலிசி வழங்குகிறது. ஜீவன் உமாங் பாலிசியில் நான்கு பிரிமீயங்களாக பணம் செலுத்தலாம்.

அதன்படி 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என நான்கு பிரிவுகளாக இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தலாம். இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஜீவன் உமாங் பாலிசியை 30 வருடங்களை தேர்ந்தெடுத்தால், 70 ஆண்டுகளில் பிரீமியம் செலுத்தும் காலம் முடிவுக்கு வரும். இதற்கு குறைந்தபட்சம் அந்த நபருக்கு 40 வயது இருக்க வேண்டும். அதேபோல் 15 ஆண்டு பிரீமியம் எடுக்கும் நபர் 55 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.

ஜீவன் உமங் பாலியிசில் முதலீடு செய்யும் தொகையில் 8 சதவீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும். உதாரணமாக, 15 வயதில் ஜீவன் உமாங் பாலிசியில் சேர்பவர், 4.5 லட்சம் ரூபாய்க்குக் காப்பீட்டு எடுப்பதாக வைத்துக்கொள்வோம். இவர் 15 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால், 31 வயது ஆகும்போது, ரூ.36,000 கிடைக்க ஆரம்பிக்கும். இது 100 வயது வரை தொடரும். பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு நாமினிக்கு மொத்தத் தொகையாக வழங்கப்படும்.

ஒருவேளை பாலிசிதாரர் 25 வயதில் ரூ.5 லட்சத்துக்கு பாலிசி எடுத்து, 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால், அந்த நபர் ஆண்டுக்கு ரூ.14,758 செலுத்த வேண்டியிருக்கும். அதாவது 55 வயது வரை ப்ரீமியம் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு 100 வயதை அடையும் வரை ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டுத் தொகையில் 8 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like