1. Home
  2. தமிழ்நாடு

தரமான காற்று வேணுமா ..? அப்போ நெல்லைக்கு போங்க..!

Q

கடந்த சில ஆண்டுகளாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மாசடைந்து கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்குத் தீபாவளி பண்டிகையின் போதெல்லாம் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வாரம் வெளியிட்டது.
அதில், தரமுள்ள காற்று இருக்கும் நகரமாகத் தமிழ்நாட்டின் நெல்லை (திருநெல்வேலி) விளங்குகிறது. காற்று தரக் குறியீட்டில் நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக நெல்லை விளங்குவதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது.
நெல்லையின் AQI அளவு 33 ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் நெல்லை நகரத்தின் காற்றின் தரம் அதன் இயற்கை நிலப்பரப்பு காரணமாக நன்றாக உள்ளது.
சிறப்பான காற்றின் தரக் குறியீட்டிற்கான பட்டியலில் 5வது இடத்தில் தஞ்சாவூர் உள்ளது. தஞ்சாவூரின் AQI அளவு 33 ஆகும். டாப் 10 இடங்களில், 7 இடங்களில் தென் மாநில நகரங்கள் உள்ளன.
காற்றின் தர அளவீடு:
AQI அளவுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது, 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது, அதேசமயம், நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும்.
101 முதல் 200 வரை இருந்தால் மிதமாக மாசுபட்டது. ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.
அதன்பிறகு “மோசமானது” (AQI 201-300) நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்குச் சுவாச கோளாறுகள் ஏற்படும், “மிகவும் மோசமானது” (301-400) – சுவாச நோய்கள் ஏற்படக்கூடும்.
“கடுமையானது” (401-450), மற்றும் 450க்கு மேல் “கடுமையாகத் தீவிரமானது” – ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கனவே நோயுடன் இருப்பவர்களைத் தீவிரமாகப் பாதிக்கும்.

Trending News

Latest News

You May Like