MRI ஸ்கேன் எடுக்கணுமா..! அப்ப... போயிட்டு 2027ம் ஆண்டு வாங்க..!

டெல்லி எய்ம்ஸ்-யில் தினமும் சுமார் 15,000 நோயாளிகள் வருகிறார்கள். இவற்றில், தோராயமாக 10% பேருக்கு அல்ட்ராசவுண்ட், எக்ஸ்ரே மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற கண்டறியும் இமேஜிங் நடைமுறைகள் தேவைப்படுகின்றன. இந்த நடைமுறைகளுக்கான காத்திருப்பு காலம் கணிசமாக வேறுபடுகிறது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுக்க வந்தவரை 3 ஆண்டு கழித்து வர சொன்னதால் நோயாளி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சைக்கு சென்ற ஜெய்தீப் தே (52) என்பவர், MRI ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். அவரை குறிப்பிட்ட தேதியில் வர சொல்லி அனுப்பியுள்ளார்கள்.எந்த தேதி வர வேண்டும் என அவர் பார்த்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
அவரை அதாவது 3 ஆண்டுகள் கழித்து 2027ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதிக்கு அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் கூறியதாவது, வெளியே தனியார் மருத்துவமனைகளில் ₹18,000 வரை செலவாகும் என்பதால் எய்ம்ஸ் வத்தோம் ஆனால் இப்போது நான் ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டுவிட்டேன் என்றார்.