1. Home
  2. தமிழ்நாடு

10 லட்சம் ரூபாய் வேணுமா ? அப்போ மொடா குடிகாரனா இருங்க போதும்.. விளாசும் கஸ்தூரி..!

1

கள்ளச்சாராயம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் பலரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எந்த ஆதரவும் இல்லாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 10 லட்சம் நிவாரண நிதி வழங்குவது உயிரிழப்புகளை ஊக்கப்படுத்துவது போன்று உள்ளது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரியும் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 10 லட்சம். விளையாட்டு வீரருக்கா? போரில் உயிர் நீத்தவருக்கா? விஞ்ஞானிக்கோ விவசாயிக்கோ வா? குடும்பத்தை கைவிட்டு கள்ளசாராயத்தை குடித்து செத்தவருக்கு.
இந்த கேடு கெட்ட dravidamodel லில் பத்து லட்சம் சம்பாதிக்க உண்மையா உழைக்க தேவையில்லை. மொடா குடிகாரனா இருந்தா போதும்... என காட்டமாக பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like