1. Home
  2. தமிழ்நாடு

பேடிஎம் ஃபாஸ்டேக் யூஸ் பண்றீங்களா..? இன்றே கடைசி..! நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது..!

1

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (பிபிபிஎல்) நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் கணக்குகளை மார்ச் 15 ஆம் தேதிக்குள் வேறு வங்கிகளுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. 

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் இனி மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு தங்கள் இருப்பை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ விருப்பமில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பேடிஎம் பேமெண்ட் வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு தங்களுடைய பேடிஎம் கணக்கை மாற்றி வருகின்றனர். இதற்கான வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பேடிஎம் மீது ரிசர்வ் வங்கி விதித்த தடைக்குப் பிறகு தற்போது ஃபாஸ்டாக் வழங்கும் வங்கிகளின் பட்டியலில் இருந்து பேடிஎம் பேமெண்ட் வங்கியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இனி பேடிஎம் மூலமாக நீங்கள் ஃபாஸ்டாக் எடுக்க முடியாது. NHAI வெளியிட்டுள்ள பட்டியலில் இப்போது 39 வங்கிகளின் பெயர்கள் உள்ளன. இந்த வங்கிகளின் உதவியுடன் இனி நீங்கள் ஃபாஸ்டாக் எடுக்கலாம்.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், இண்டஸ் இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க் போன்ற முக்கிய வங்கிகள் இந்தப் பட்டியலில் உள்ளன.

பெரிய வங்கிகள் மட்டுமல்லாமல் சிறு வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் (NBFC) இந்தப் பட்டியலில் உள்ளன. அலகாபாத் வங்கி, AU சிறு நிதி வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, காஸ்மோஸ் வங்கி, டோம்பிவலி நகரி சககாரி வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, பெடரல் வங்கி, ஃபினோ பேமெண்ட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜே&கே வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லிவ்குயிக் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், நாக்பூர் நகரிக் சககாரி வங்கி லிமிடெட், பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி, சரஸ்வத் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, தி ஜல்கான் மக்கள் கூட்டுறவு வங்கி , திருச்சூர் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகிய வங்கிகளும் பட்டியலில் உள்ளன.

Trending News

Latest News

You May Like