பேடிஎம், கூகுள் பே யூஸ் பண்றீங்களா? இன்று முதல் எல்லாம் மாறப் போகுது..!
யூபிஐ செயலிகள் மூலம் வங்கிக் கணக்கு பேலன்ஸ் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். அதைத் தாண்டி அனுமதிக்கப்படாது. இதேபோல், மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே அணுக முடியும். இந்த வசதியை அடிக்கடி தேவையில்லாமல் பயன்படுத்துவதைத் தடுக்கவே இந்த வரம்பு கொண்டுவரப்படுகிறது.
ஆட்டோடெபிட் கட்டுப்பாடு :
OTT தளங்கள், மியூச்சுவல் ஃபண்ட் SIPகள் போன்றவற்றிலிருந்து தானாகவே பணத்தைக் கழிக்கும் வசதி உள்ளது. இனிமேல், ஆட்டோடெபிட் குறைந்த நேரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படும். ஆட்டோடெபிட் காலை 10 மணி முதல் தொடங்கி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு மட்டுமே செயல்படும்.
பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு :
யூபிஐ பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு சரிபார்ப்புக்கும் இடையில் குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். இது தவிர, ஆகஸ்ட் 1 முதல் ரீஃபண்ட் வரம்பும் நிர்ணயிக்கப்படும்.
ஏன் இந்த மாற்றங்கள்?
யூபிஐ அமைப்பின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்தில் சுமார் 1,600 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இது யூபிஐ நெட்வொர்க்கில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தத்தைக் குறைக்கவும், சேவையின் செயல்திறனை அதிகரிக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இந்த மாற்றங்கள் காரணமாக, யூபிஐ பயனர்கள் தங்கள் பரிவர்த்தனை நடவடிக்கைகளை சரியாகத் திட்டமிட வேண்டும். இல்லாவிட்டால் சிரமம் ஏற்படலாம்.
இந்தியாவில் இப்போது யூபிஐ மூலம் பணம் அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கும் போக்கும் தீவிரமாக உள்ளது. அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் இருப்பதால் யூபிஐ செயலிகளைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.