1. Home
  2. தமிழ்நாடு

இதை கவனிங்க..! பாஸ்ட்டேக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே...

1

நாடு முழுவதும் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்தவும் ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்’ கொள்கையை அறிமுகப்படுத்தியது. NPCI ஆகஸ்ட் மாதம் புதிய Fastag விதிகளை அமல்படுத்தியது. பாஸ்டேக் பயனர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் ‘ஒரு வாகனம், ஒரு FasTag’ என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இது போக இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.

அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது. உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும்.இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை.

மாற்றங்கள்: தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட்ட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.

Trending News

Latest News

You May Like