ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள் ? இனிமே கொஞ்சம் உஷாரா இருங்க…!

ரயில் பயணங்கள் மிகவும் பாதுக்கப்பனதாகவும் அதே சமயம் டிக்கெட்டுகளின் விலை குறைவாகவும் இருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். பேருந்து சேவை, விமான சேவையை விட அதிகமாக விரும்பப்படும் ஒரு சேவையாக ரயில் சேவை உள்ளது.
இந்நிலையில், ரயில் பயணங்களை மேற்கொள்ள நினைக்கும் பயனாளர்கள் பெரும்பாலும் ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்து விடுகின்றனர். இதனால் அவர்களின் நேரம் மற்றும் அலைச்சலை தவிர்க்க முடிகிறது. அவ்வாறு பதிவு செய்யும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரயில் நிலையம் போகாமல் அந்த ரயிலை தவற விட்டுவிடுகின்றனர். அதுபோன்று தவிற விட்டவர்கள் அடுத்த ரயில் நிலையத்திற்கு சென்று அவர்கள் முன்பதிவு செய்திருக்கும் இருக்கைக்கு செல்கின்றனர்.
இதையடுத்து, தற்பொழுது புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் புறப்பட்ட பிறகு ரயில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் இருக்கைக்கு சென்று சோதனை செய்ய வேண்டும். அப்பொழுது பயணிகள் இல்லாமல் இருக்கும் இருக்கையை நோட் செய்து வைக்க வேண்டும். 10 நிமிடத்திற்கு மேலும் அந்த இருக்கையில் பயணிகள் யாரும் வரவில்லை என்றால் அந்த முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டு மற்றொரு பயணிக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.