ஆன்லைன் ஷாப்பிங் பண்றீங்களா? இந்த 4 விஷயங்கள் மிக முக்கியம்!

கொரோனா காலம் என்பதால் பெரும்பாலானோர் கடைக்கு நேரே செல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் செய்துவருகின்றனர். சமீபத்தில் அமேசான், பிளிப்கார்ட் மூலம் பல கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தம் நடைபெற்றுள்ளது. அப்படி ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
வாங்கும் பொருட்களை ஈ-காமர்ஸ் இணையதளத்தில் பார்க்கும் நீங்கள், அந்த பொருளை தயாரித்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் அல்லது ஆப்-இல் சென்று அதனை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் தரமான பொருள் வாங்குவது உறுதி செய்யப்படும்.
ஏராளமான ஈ-காமர்ஸ் இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சில இணைய தளங்கள் மட்டுமே மிகவும் பிரபலமானவை. சில சமயம் அதிரடி விலை குறைப்பு என்பதை பார்த்து மக்கள் ஏமாந்து போகக்கூடும். அதனால் மிகவும் விழிப்புடன் அதிரடி ஆஃபர்களுக்கு ஏமாறாமல் பர்சேஸ் செய்ய வேண்டும்.
ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க கேஷ் ஆன் டெலிவரி மிக முக்கியமான ஆப்ஷன். முடிந்தவரை பொருளை பெறும் போது பணம் கொடுக்கும் முறையை தேர்வு செய்யுங்கள். அதன் மூலம் பொருளை பார்த்து பணத்தை கொடுக்க முடியும். அதனால் மோசடிகள் தவிர்க்கப்படும்.
குறிப்பாக ஆன்லைனில் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது கார்டின் தகவல்களை சேமிக்க வேண்டுமா என்று கேள்வி கேட்கப்படும். ஆம், இல்லை என்பதில் ஆம் என ஏற்கனவே டிக் அடித்திருக்கும். அதை மறக்காமல் எடுத்துவிட்டு கார்டு தகவல்களை சேமிப்பதை தவிர்க்க வேண்டும்.
newstm.in