இதை பார்த்தீங்களா.. எல்லாமே லஞ்ச பணம்..! லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக் கொடுத்த கணவர்..!
இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டி கொடுத்த சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.
ஐதராபாத்தில் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வரும் தனது மனைவி திவ்ய ஜோதி, தினமும் லஞ்சம் வாங்குவதாக கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார் என்றும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டு கட்டாக வாங்கிய லஞ்சப் பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறி கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.