உங்களுக்கு அடிக்கடி தும்மல் வருதா ?தேன், லெமன் கலந்த ட்ரிங்க் குடிங்க..!

தூசிகளால் அல்லது இயற்கையாகவே இந்த ஒவ்வாமையால் தொடர் தும்மல் வந்து பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதனை ஒரு நோயாக கருதாவிட்டாலும், தொடர் தும்மலால் உடல் சோர்வு ஏற்படும்.
இதனை வீட்டு வைத்திய முறை மூலமாக குணப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் சில நேரங்களில் அதில் இருந்தும் பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், வீட்டு வைத்தியம் வாயிலாக இதற்கு தீர்வு காண முடியும்.
அதன்படி, ஒரு கிளாஸ் சுடுதண்ணீரில், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தினசரி பருக வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தும்மல் பிரச்சனை முற்றிலும் நீங்கி விடும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். அதேபோல், எலுமிச்சை மூலம் வைட்டமின் சி சத்தும் நம் உடலுக்கு எளிதாக கிடைத்து விடும்.