1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா..? வாங்க தெரிஞ்சிக்கலாம்

1

ஆதார் கார்டு வங்கி கணக்கு திறப்பதற்கு, அரசாங்க சலுகைகளைப் பெற விண்ணப்பிப்பதற்கு, சிம் கார்டு வாங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமான அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதார் அவசியம். இதற்கு இந்த ஆவணத்தில் உள்ள அனைத்து தகவல்களும் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். இதன் காரணமாக ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்.

ஆதாரை புதுப்பிதற்கு சில வரம்புகள் உள்ளது. பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட முறை மட்டுமே மாற்ற முடியும். பெரும்பாலான சேவைகளுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இதனால் ஆதாரின் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

இதனால் ஒருவர் சிம் கார்டுகளை மாற்றினால், ஆதாரிலும் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். ஆதாரின் தொலைப்பேசி எண்ணை மாற்றுவதற்கு UIDAI எந்தவொரு வரம்பையும் நிர்ணயம் செய்யவில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி உதவிக்கரமாக உள்ளது.

அதேநேரம் ஆதார் கார்டில் பெயரை மாற்ற வேண்டுமென்றால் இரண்டு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். எழுத்துப்பிழை போன்றவற்றை பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக கொண்டு சரி செய்யலாம். பிறந்த தேதியை திருத்தம் செய்ய வேண்டும் என்றால் ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும்.

மொபைல் நம்பரை போன்று முகவரியையும் எத்தனை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம். ஆன்லைனில் மை ஆதார் போர்ட்டல் அல்லது மை ஆதார் என்ற செயலியில் புதுப்பிக்கலாம். updatedocument என்ற அம்சத்தை பயன்படுத்தி ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் ஜுன் 14 ஆம் தேதி வரை இந்த இலவச சேவையை பெறலாம். ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பிக்க ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like