நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா?

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு நாளை (மார்ச் 16) முடிவடைகிறது.
இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ தளம் மார்ச் 18ம் தேதி திறக்கப்பட்டு 20ம் தேதி இரவு 11.50 மணிக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.