1. Home
  2. தமிழ்நாடு

இரவு நேரத்தில் வீட்டை பெருக்க கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா..?

1

பொதுவாக, வீடுகளைப் பெருக்கித் துடைத்து சுத்தம் செய்வதை நேர்மறை ஆற்றல் இருக்கும் பகல் நேரத்தில் மட்டுமே செய்வது வழக்கம். இரவுகளில் இதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், ஆன்மிக ரீதியாக இரவில் வீடு பெருக்குவது நல்லதல்ல என்றும், பெருக்கினால் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வீட்டில் தங்க மாட்டார் என்றும் அதனால் செல்வம் குறைந்து  வறுமை பெருகும் என்பதும் பெரியோர் கருத்து.

வாஸ்து சாஸ்திரமும் இதையே குறிப்பிடுகிறது. காரணம், இரவுகளில் உலா வரும் எதிர்மறை ஆற்றல்களை இச்செயல் எளிதாக ஈர்க்கும் என நம்பப்படுகிறது.  குறிப்பாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீடு பெருக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆன்மிகக் காரணங்கள் சொல்லி அதன் பொருட்டு இதுபோன்ற விஷயங்களை எச்சரித்தாலும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தால் இதன் பின்னணி என்ன என்பது புரியும்.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீடும் தனித்தனி பெரிய வீடுகளாக இருக்கும். தற்போதைய அடுக்குமாடிக் கட்டடங்கள் போல அல்லாமல் அந்த வீட்டைச் சுற்றி பெரிய பெரிய மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் இருக்கும். சூரியன் மறைந்த பிறகுதான் செடி, கொடிகளில் மறைந்திருக்கும் பூச்சிகள், பூரான், தேள், பாம்பு போன்றவை வெளியே வரும். எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் அவை வரும்போது நாம் பெருக்கினால் அவற்றைத் தொந்தரவு செய்ததாக நினைத்து அவற்றினால் நமக்கு ஆபத்து நேரலாம் என்பது ஒரு காரணம்.

அதுபோல, அந்தக் காலத்தில் மின்சார வசதிகள் கிடையாது என்பதால், வெளிச்சத்திற்காக விளக்கு ஒளியைத்தான் பயன்படுத்தி வந்தார்கள் என்பதை அறிவோம். இரவில் வீட்டைப் பெருக்கினால் நம்மை அறியாமல் தரையில் விழும் நாம் அணிந்திருக்கும் தங்கம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்களையும் கூட்டித் தள்ளி குப்பையில் போட்டு விடும் வாய்ப்பு இருந்தது என்பதும் காரணமாக இருந்தது. இரவு நேரத்தில் குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது என்ற பழக்கமும் இதைக் காரணமாக வைத்தே வந்தது எனவும் கூறலாம்.

துடைப்பம் லட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், துடைப்பத்தின் மீது கால் வைத்தால், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோபப்படலாம். வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். இதனுடன், அத்தகைய வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.

தலைகீழாக துடைப்பம் பிடிப்பதைத் தவிர்க்கவும்

பெரும்பாலும் வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்த பின்னர், பலர் அதை அவசரமாக தலைகீழாக வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது வீட்டில் முரண்பாடு அதிகரிக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் டென்சனும் அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை சரியான இடத்தில் நேராக வையுங்கள். இது தவிர துடைப்பத்தை நிற்க வைத்தால், வீட்டில் எதிர்மறையான விளைவை அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை கால் படாத இடத்தில் படுக்க வையுங்கள்.

துடைப்பத்தை மறைத்து வைக்கவும்

வாஸ்துப்படி, துடைப்பம் வீட்டின் செழிப்பின் அடையாளமாகும். எனவே இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும் யாரும் உங்கள் வீட்டில் உள்ள துடைப்பத்தைப் பார்ப்பது கெட்டதாக கருதப்படுகிறது.

Trending News

Latest News

You May Like