செக் கொடுக்கும் போது பின்புறத்தில் கையெழுத்து போட சொல்வது ஏன் தெரியுமா?
நீங்கள் காசோலை மூலம் பணம் செலுத்தும் போதெல்லாம், காசோலையின் பின்புறத்திலும் கையெழுத்திட வங்கி அலுவலர்கள் கூறுவார்கள். செக்கின் முன்புறம் ஏற்கனவே செக் வழங்கியவர் கையெழுத்து இருக்கும்போது செக்கின் பின்பகுதியில் ஏன் இந்த அடையாளம் வைக்கப்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது.காசோலையின் பின்புறத்தில் ஏன் கையெழுத்திட வேண்டும் என்ற கேள்வி பலரிடம் இருக்கும். கையொப்பமிடப்படாவிட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
நீங்கள் ஒரு காசோலையை பரிவர்த்தனைக்காக வழங்குகிறீர்கள் என்றால், அத்தகைய சந்தர்ப்பத்தில் காசோலையின் பின்புறத்தில் கையொப்பமிடுவது அவசியம்.காசோலையில் இருந்து எடுக்கப்பட்ட பணம் காசோலையை கொண்டு வந்த நபருக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யவும், காசோலையை தெரியாத நபர் பணமாக்கினால் வங்கி சம்பந்தப்படாமல் இருக்கவும் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது.காசோலை மூலம் எந்த நபரும் பணத்தை எடுக்க முடியும். அதாவது, காசோலையில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருந்தாலும், அந்த காசோலையில் இருந்து வேறு யாராவது பணம் எடுக்கலாம். எனவே மோசடிகளைத் தவிர்க்க, வங்கிகள் காசோலையுடன் வங்கியை வந்தடைபவரை அதன் பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்கின்றன.
சில சமயங்களில் காசோலை மூலம் பணம் எடுக்க வங்கிக்குச் செல்லும் நபரிடம் முகவரிச் சான்றும் கேட்கப்படலாம். குறிப்பாக காசோலைத் தொகை பெரியதாக இருந்தால் முகவரிச் சான்று கேட்பார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏதேனும் மோசடி நடந்தால் அந்த நபரை தொடர்பு கொண்டு மோசடி குறித்து எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
50,000 ரூபாய்க்கு மேல் தொகை இருந்தால், பணம் எடுக்க வரும் நபரிடம் வங்கி கண்டிப்பாக முகவரிச் சான்றிதழைக் கேட்டு, அதன் பின்னரே பணத்தைத் தருகிறது. இது தவிர, காசோலையின் முன்பக்கத்தில் உள்ள கையொப்பம் போலவே பின்னல் போடச்சொல்லும் யுக்தியும் உள்ளது. யாரேனும் கையெழுத்திட மறுத்தால், பணத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை அவரே இணைத்து கொடுக்க வேண்டும்.