1. Home
  2. தமிழ்நாடு

ஏன் தெரியுமா ?பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கான காரணம்..!

1

ஒரு சராசரி மனிதன் நாள்தோறும் பல வண்ணங்களை தன கண்ணால் பார்க்கிறான் உணர்கிறான். அவ்வாறு நாம் பார்க்கும் வண்ணங்களில் சிலவற்றை எதற்காக இதை இதில் உபயோகித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் வராமல் இருக்காது. அந்த வகையில் நாம் அன்றாடம் பார்க்கும் பள்ளி வாகனங்களில் ஏன் மஞ்சள் நிறத்தை பயன்படுத்துகிறார்கள் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அப்படியிருந்தால் அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

பள்ளி பேருந்து மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கான காரணம்:

மஞ்சள் நிறம் அனைவரையும் ஈர்க்கும் தோற்றத்தை கொண்டிருக்கிறது. மழை, மூடுபனி, பனி போன்றவையக  இருந்தால் கூட தூரத்திலுருந்து மஞ்சள் நிறத்தை ஈசியாக காணலாம். மஞ்சள் நிறத்தின் பக்கவாட்டு புறப்பார்வை சிவப்பு நிறத்தை விட 1.24 மடங்கு அதிகமாக இருப்பதால் மற்ற நிறத்தை விட மஞ்சள் நிறத்தை எளிதாக பார்க்க முடியும். நீங்கள் நேராக பார்க்காத போதும் கூட மஞ்சள் நிறத்தை ஈசியாக காணலாம். அதனால் தான் நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவும், குழந்தைகள் பாதுகாப்பாக தங்கள் வீட்டை அடையவும் பள்ளி பஸ் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்தை விட  சிவப்பு நிறம் அதிகபட்ச அலைநீளம் சுமார் 650 NM இருப்பது  உண்மை. மேலும் சிவப்பு நிறம் தெளிவாக தெரியும், இருந்தாலும் சிவப்பு நிறம் ஆபத்தை குறிப்பதால் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுக்கவில்லை.

பள்ளி பேருந்தின் விதிமுறைகள்:

  • பள்ளி பேருந்தின் முபாப்கா மற்றும் பின் பக்கம் பள்ளி பேருந்து என்று எழுதியிருக்க வேண்டும்.
  • அதுவே வடக்கை பேருந்தாக இருந்தால் பள்ளியின் பொறுப்பில் என்று எழுதியிருக்க வேண்டும்.
  • பேருந்தில் முதுலுதவி பெட்டி இருக்க வேண்டும். தீயணைப்பு கருவி இருக்க வேண்டும்.
  • பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி நம்பர் எழுதியிருக்க வேண்டும்.
  • பேருந்தின் கதவுகளில் பூட்டுகள் இருக்க வேண்டும். பேருந்தில் பள்ளியைச் சேர்ந்த ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வண்டிகளில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 40 கிமீ வேகத்தில் ஸ்பீட் கவர்னர்கள் பொருத்தப்பட வேண்டும்.
  • பள்ளி வண்டியை ஓட்டுபவர் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு LMV-போக்குவரத்து வாகனங்களை ஓட்ட சரியான உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் வெளிர் நீல நிற சட்டை, வெளிர் நீல நிற கால்சட்டை மற்றும் கருப்பு காலணிகளை கட்டாயமாக அணிய வேண்டும். அவரது பெயர் ஐடி சட்டையில் இருக்க வேண்டும்.
  • பேருந்தின் உள்பக்கம் பிள்ளைகளின் பைகளை வைப்பதற்கு இடம் இருக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like