1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவில் இணைந்தது ஏன் தெரியுமா? : குஷ்பு சொல்லும் விளக்கம்!

பாஜகவில் இணைந்தது ஏன் தெரியுமா? : குஷ்பு சொல்லும் விளக்கம்!


பாஜகவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது பாஜகவிலேயே இணைந்திருக்கும் நடிகை குஷ்பு அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

அதில், நாட்டிற்கு எது நல்லது என்று போகப்போக புரிந்தது, அதனால் பாஜகவில் இணைந்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

ஆளுங்கட்சியை விமர்சிப்பதுதான் எதிர்கட்சியின் விதிமுறை, அதைத்தான் செய்து கொண்டிருந்தேன், ஆனால் பல இடங்களில் பாஜகவை ஆதரித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்தது ஏன் தெரியுமா? : குஷ்பு சொல்லும் விளக்கம்!

பாஜக தலைவர்கள் மீது எந்த ஊழலும் இல்லை. கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. நான் அரசியல்வாதி என்பதைவிட சமூக சீர்திருத்தவாதி. மாற்றம் என்பது மனிதரின் இயல்பு.

எதிர்க்கட்சியில் இருந்ததால் கட்டாய சூழலில் பாஜகவை விமர்சித்தேன். எனக்கு வேறு வழியில்லை. காங்கிரஸின் தலைவர் ஒரு கருத்தை கூறும்போது கீழே இருக்கும் நான் அதைத்தான் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like