1. Home
  2. தமிழ்நாடு

இன்று அரசுப்பள்ளிகள் இயங்கும் – எதற்காகத் தெரியுமா ?

1

தமிழ்நாட்டில் ஆயுத பூஜையும், விஜயதசமியும் எப்போதும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். விஜயதசமி பண்டிகையின்போது பொதுவாகத் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இன்று விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. விஜயதசமி பண்டிகையில் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஏதுவாக, விஜயதசமி பண்டிகை இன்று பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் திறந்திருக்கும்.

விஜயதசமி நாளில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நெல்லில் அ என்ற அகர வரிசையில் எழுத வைத்துப் பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விஜயதசமி நாளில் குழந்தைகளைக் கல்வி நிலையங்களில் சேர்ப்பதால் தங்களது பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று பெற்றோர்கள் நம்பும் காரணத்தால் இந்த நாளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளிலும் நாளை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாகத் தனியார் பள்ளிகளும் இன்று இயங்க உள்ளது. இன்று மட்டும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது.

Trending News

Latest News

You May Like