1. Home
  2. தமிழ்நாடு

நீ யார் மேல கை வெச்சி இருக்கே தெரியுமா..? ரெட்டை தல படத்தின் ஆக்ஷன் டீஸர் ரிலீஸ்..!

Q

நடிகர் அருண் விஜய் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில்  'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'ரெட்ட தல' படத்தில் அருண் விஜய் 2 வேடங்களில் 4 வெவ்வேறு விதமான தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்  இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like