பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?

பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 2 தவணை தடுப்பூசிகள், 18 வயதுக்கு மேல் தகுதியானவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி 3ஆவது தவணையாக கருதப்படும் பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ஆம் தேதி முதல் போடப்படுகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஏற்கனவே எந்த வகை தடுப்பூசியை போட்டிருக்கிறார்களோ அதே கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் 2 தவணைகளாக போட்டவர்களுக்கு அதே வகை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்க்கும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் 2ஆவது தவணை தடுப்பூசி போட்டு 9 முதல் 12 மாதங்கள் கடந்த பின், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in