1. Home
  2. தமிழ்நாடு

உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு டூப் போட்டது யாரு தெரியுமா ?

1

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ஜெகன், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து என்று பலர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தியன் 2 படம் பூர்த்தி செய்ததா என்றால் பதில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

கமல் ஹாசனுடன் திரையில் ஒன்றாக நடிக்கவேண்டும் என்ற விவேக்கின் நீண்ட நாள் ஆசை இந்தியன் 2  படத்தின் மூலம் நனவாக இருந்தது, ஆனால் அவரின் திடீர் மரணத்தால் அது சாத்தியமாகவில்லை.2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்தார்.  அவரின் திடீர் மரணம் ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அப்போது இந்தியன் 2 திரைப்படம் ப்ரொடக்ஷனில் இருந்தது. அதனால் பாதி படத்திற்கு மேல் இந்தியன் 2-வில் விவேக் நடிக்கவில்லை. அதனால் மீதி படத்தில் விவேக்கிற்கு டூப் போட்டு சில கிராபிக்ஸ் வேலைகள் செய்து அச்சு அசல் விவேக்கே நடித்திருப்பது போல் படத்தில் காட்டப்பட்டது.விவேக்கிற்கு டூப் போட்ட அந்த நடிகர் யாரென்று பலரும் தேடிவந்த நிலையில், அந்த நபர் யாரென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1

பல சீரியல்கள் மற்றும் தமிழ் படங்களில் துணை நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கோவை பாபு. இவர் தான் இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக்கிற்கு டூப்பாக நடித்தவர்.அவர் ஏற்கனவே பல படங்களில் ஒரு துணை காமெடி நடிகராக நடித்து வருகிறவர். அதுமட்டுமல்லாமல் விவேக் உடன் சேர்ந்து காதல் சடுகுடு என்ற படத்தில் ஒரு பிரபலமான காமெடி காட்சியில் நடித்திருப்பார் . மைனர் குஞ்சுவை சுட்டுட்டாங்களா என்ற ஒரு காமெடி மிகவும் பிரபலமானது. அதில் மைனர் குஞ்சுவாக நடித்தவர் தான் இந்த கோவை பாபு.

Trending News

Latest News

You May Like