கல்கி படத்தில் வரும் புஜ்ஜி வாகனத்தை உருவாக்கியது யார் தெரியுமா ?
நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் கல்கி 2898 AD.இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் இப்படத்திக்காக ப்ரேதேக்கியமாக தயாரிக்கப்பட்ட புஜ்ஜி என்ற வாகனம் தான் இப்படத்தின் ஹைலைட்.
புஜ்ஜி வாகனத்தின் வடிவமைப்பை பார்க்கும் போது கொஞ்சம் பேட்மேன் வாகனத்தை போலவும், கொஞ்சம் நீர்முழ்கி கப்பலை போலவும் இருக்கும். கோவையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று இந்த புஜ்ஜி வாகனத்தை வடிவமைத்துள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. வாகனத்தின் நீளம் 6075 மிமீ, அகலம் 3380 மிமீ, உயரம் 2186 மிமீ ஆகும். மேலும் வாகனத்தின் எடை சுமார் 6 டன் என குறிப்பிட்டுள்ளனர்.புஜ்ஜி, பேட்டரியில் இயக்கப்படும் வாகனம் ஆகும். இதில் 94 kW பவர், 9800 Nm டார்க் மற்றும் 47 kWh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வாகனத்தை உருவாக்க மஹேந்திர நிறுவனத்தின் பங்கும் உள்ளது.
இந்த புஜ்ஜி வாகனத்தில் ஏஐ தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.