எந்த ராசி முத்து அணியக் கூடாது தெரியுமா? முத்து அணிய வேண்டிய ராசிகள்..!

நவகிரகங்களில் சந்திர பகவான் உடன் தொடர்புடையது முத்து. மனோகாரகனான சந்திர பகவான் ஒருவரின் மனதையும், செயலையும் கட்டுப்படுத்த கூடியவராக இருக்கிறார். ஒருவர் முத்து பதித்த மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை அணியும்போது அவரின் மனம் அமைதிப் படுத்தப்படுவதோடு, கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
ஒருவர் முத்து பதித்த ஆபரணத்தை அணியும்போது அவர் மனநோயிலிருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. மனக்கவலை, மன அழுத்தத்தில் உள்ளவர்கள் அதிலிருந்து மெல்ல மெல்ல விடுபட முடியும். இந்த ஆபரணத்தை அணிவதால் நம்முடைய மனநிலை, மூளை நிலைப்படுத்தப்படுவதால் அதிலிருந்து விடுபட முடியும். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் அணிவதால் தங்களுடைய கோபம் கட்டுக்குள் வரும். மேலும் மனதில் எதிர்மறையான சிந்தனைகள் தடுக்கப்படும். நேர்மையான எண்ணங்கள் அதிகரிக்கும்.
எந்த ராசியினரெல்லாம் முத்து பதித்த ஆபரணங்களை அணியலாம்?
ரத்னா சாஸ்திர குறிப்புகளின் படி, சந்திர பகவானுடன் தொடர்புடைய முத்து ஒருவர் அணியும் போது அவருக்கு பல்வேறு விதத்தில் நன்மைகள் கிடைக்கிறது. தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும். வளமும் நிறைந்திருக்கும். யார் ஒருவர் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்துகிறார்கள் அவர் வாழ்க்கையில் முன்னேறலாம் என பழமொழிகள் கூறுகின்றன. அந்த வகையில் நம்முடைய மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ரத்தினமாக முத்து விளங்குகிறது. இருப்பினும் எல்லா ராசிகளையும் சேர்ந்தவர்களுக்கும் இந்த முத்து அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
மேஷம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியை சேர்ந்தவர்கள் முத்து பதித்த மோதிரம் அல்லது ஆபரணங்களை அணிவது நன்மை தரும்.
எந்த ராசியினர் அவ்வப்போது முத்து அணியலாம்?
பன்னிரண்டு ராசிகளில் சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசியை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு சுப நிகழ்ச்சிகள் அல்லது விசேஷங்களில் கலந்து கொள்ளும்போது மட்டும் முத்து அணிவது நன்மை தரும். மற்ற நேரங்களில் முத்து மணி வரையைத் தவிர்ப்பது நல்லது.
எந்த ராசியினர் முத்து அணியக்கூடாது?
ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் முத்து அனைவரையும் தவிர்ப்பது நல்லது.
முத்து ஆபரணங்களை அணியும் முறை:
இரத்தின அறிவியலின் படி, முத்து படித்த ஆபரணங்களை அணிய நினைப்பவர்கள், வளர்பிறை திங்கட்கிழமை நாளில் இரவு நேரத்தில் சுண்டு விரலில், வெள்ளி மோதிரத்தில் பதித்த முத்து அணிவது நன்மை தரும். பௌர்ணமி நாளிலும் அணியலாம்.
இந்த ஆபரணத்தை அணிவதற்கு முன் கங்கை நீரால் அதை அபிஷேகம் செய்து, சிவபெருமானுக்கு அத்தனை செய்த பின்னர், முத்து பதித்த ஆபரணத்தை அணிவதால் நன்மைகள் அதிகரிக்கும் என்பது அதிகம்.