அமித்ஷா எந்தெந்த நிறுவனப் பங்குகளை வைத்திருக்கிறார் தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் அமித்ஷா, குஜராத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அமித்ஷா மொத்தம் 181 பங்குகளில் முதலீடு செய்துள்ளார். அவரது போர்ட்ஃபோலியோ மதிப்பு 17.4 கோடி ரூபாய். அவர் எந்தெந்த நிறுவனப் பங்குகளை வைத்திருக்கிறார் தெரியுமா?
ஐ.டி.சி,
வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ்,
இன்ஃபோசிஸ்,
கிரைண்ட்வெல் நார்டன்,
கும்மின்ஸ் இந்தியா,
கன்சாய் நெரோலக் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகளிலும் அமித்ஷா தலா 0.4 கோடி ரூபாய் முதல் 0.7 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
இந்துஸ்தான் யுனிலீவர் (ரூ.1.4 கோடி),
எம்.ஆர்.எஃப் (ரூ.1.3 கோடி),
கோல்கேட் - பால்மோலிவ் (ரூ.1.1 கோடி),
புராக்டர் & கேம்பிள் ஹைஜீன் (ரூ.0.96 கோடி),
ஏ.பி.பி இந்தியா (ரூ.0.7 கோடி) ஆகிய பங்குகளில் அதிகபட்சமாக முதலீடு செய்திருக்கிறார்.
இந்த ஐந்து பங்குகளில் மட்டும் அவரது மொத்த முதலீட்டு மதிப்பு 5.4 கோடி ரூபாய்.
மேலும், பட்டியலிடப்படாத பங்குகளில் சுமார் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.