1. Home
  2. தமிழ்நாடு

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பூஜை அறை, பீரோ எந்த பகுதியில் இருக்க வேண்டும் தெரியுமா ?

1

 வீட்டில் செல்வங்கள் செழிக்க, பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வைக்கக்கூடிய பீரோ, பணப் பெட்டகம் உள்ளிட்ட உபகரணங்களை எங்கு வைக்க வேண்டும். எந்த திசை நோக்கி வைக்க வேண்டும். இப்படி வைப்பதால் எப்படி நம் வீட்டில் செல்வம் செழிப்படையும் என்பதை பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, தென் மேற்கு பகுதி குபேர மூலை ஆகும். இந்த பகுதியில் அலமாரியில் அல்லது பணம், நகை வைக்கக் கூடிய பீரோ போன்ற பணத்தை வைக்கக் கூடிய உபகரணங்களை வைக்கலாம்.

இங்கு வைக்கக் கூடிய பீரோ, லாக்கர் போன்ற பொருட்களை வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும்.

இப்படி நாம் வைப்பதன் மூலம் செல்வம் மற்றும் நகைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல், உங்களின் உத்தியோகம் மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்றத்தைத் தரும்.

வீட்டைக் கட்டும் போது அல்லது அதற்குப் பிறகு, அழுக்கு நீரின் வடிகால் எப்போதும் வடக்கு திசையில் வைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கு திசை நீர் வடிகால் அமைப்பது நல்ல அமைப்பாக கருதப்படுகிறது. இது வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது, மேலும் மரியாதையையும் அதிகரிக்கிறது. மேலும், பண சேமிப்பு அதிகரிக்கும்.

​அமைதி அதிகரிக்க

வீட்டில் பூஜை அறை வட கிழக்கு மூலையில் அமைப்பது அவசியம். பூஜை அறையில், சிவ பெருமான், பார்வதி புகைப்படமும், மகா விஷ்ணு, லட்சுமி தேவியின் புகைப்படமும், கணபதி புகைப்படம் இருப்பது அவசியம். தினமும் வணங்கி வர செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உறவு வலுப்படும்.

​வாஸ்து செடி

வாஸ்து முறைப்படி வாஸ்து செடிகளை வீட்டில் வட கிழக்கு மூலையான ஜல மூலையில் வைப்பது நல்லது. வாஸ்து செடி வளர, வளர வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பு வளரும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் ஒழியும், கடன் பிரச்னை நீங்கும். பொதுவாக பச்சை பசேல் என இருக்கும் செடி கொடிகளைப் பார்ப்பதால் நம் கண்களுக்கு குளுமை தரும். வீட்டில் இந்த செடிகளைப் பார்த்து வர மனதில் அமைதி ஏற்படும்.

தொழில் மற்றும் வேலை பிரச்சினைகள் நீங்க

வாஸ்து தோஷத்திலிருந்து விடுபட்டு செல்வத்திற்கு வழி வகுக்க, பச்சை கிளிகள் இருக்கக் கூடிய புகைப் படம் அல்லது நிஜமான கிளிகளை வடக்கு பகுதியில் வைத்து வளர்த்து பராமரிக்கலாம். இந்த செய்வதன் மூலம், தொழில், உத்தியோகத்தில் வரும் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.

​நிதி பிரச்னைகள் நீங்க

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் குப்பைகள் ஒருபோதும் வடக்கு திசையில் குவிந்து விடக்கூடாது. ஏனெனில் இந்த திசை தொழில் மற்றும் பணம் தொடர்பானது.

Trending News

Latest News

You May Like