1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா ?

1

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி என்ற கிராமத்தில் உள்ள கற்பக விநாயர் சிலையே தமிழ் நாட்டில் வடிக்கப்பட்ட முதல் விநாயகர் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த கோவில் குடையப்பட்டுள்ளது. சுமார் 1600 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் 2 மீட்டர் உயரத்தில் காட்சி தருகிறார் கற்பக விநாயகர். வடக்குத் திசை பார்த்து வீற்றிருக்கும் கற்பக விநாயகர், கற்பக மரத்தை போல, கேட்ட அனைத்தையும் கொடுத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் முற்கால பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது கல்வெட்டு ஆதாரங்கள்.

தற்காலத்தில் இந்த ஊர் பிள்ளையார்பட்டி என அழைக்கப்பட்டாலும் பழங்காலத்தில் இந்த ஊருக்கு பல்வேறு பெயர்கள் இருந்துள்ளன. எருக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, திருவீங்கைச்வரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என பல பெயர்கள் இந்த ஊருக்கு இருந்துள்ளதை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

பொதுவாக இரண்டு கரங்களை கொண்ட விநாயகரை பார்ப்பதென்பது அரிதினும் அரிது. இங்குள்ள விநாயர் இரண்டு கரங்களோடு இருக்கிறார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் மட்டுமே இரண்டு கரங்களோடு விநாயகர் சிலை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அற்புத விநாயகரை செதுக்கிய சிற்பியின் பெயர் ‘எக்காட்டூர் கோன் பெருபரணன்’.

ஆனால் தமிழ்நாட்டின் முதல் விநாயகர் சிலை... எங்கே இருக்கு தெரியுமா?

இதுபற்றி விரிவாக விளக்குகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கூறியதாவது, கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது பாதாமி. வரலாற்றில் இந்த நகரம் வாதாபி என்று குறிப்பிடப்படுகிறது. இந்நகரின் மீது பல்லவ மன்னர் மாமல்லன் எனும் சிறப்புப் பெயரைக் கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன் கி.பி.642இல் படையெடுத்து சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றினார். பல்லவ மன்னனின் வாதாபி வெற்றியைத் தொடர்ந்து அவரது தளபதி பரஞ்சோதி என்பவரால் அங்கிருந்து கொண்டு வரப்பட்டவர் விநாயகர். தமிழ்நாட்டில் அப்போது இருந்து (கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல்) தான் விநாயகர் வழிபாடு தொடங்கியது. அதற்கு முன்பாக இவ்வழிபாடு தமிழ் மண்ணில் இல்லை எனும் கருத்துக்கள் நீண்டகாலமாகவே வேரூன்றி இருக்கின்றன.

கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் இக்கல்வெட்டில் "உள்ள பிரமிறை பன்னூற சேவிக... மகன் கிழார் கோன்... கொடுவித்து" எனும் வாசகங்களை வாசித்தார். இதன் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு எனத் தெரிவித்த அவர் தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் சிற்பங்களில் இந்தச் சிற்பம் முதன்மையானது என்றும் தெரிவித்தார். இதன்மூலம் ஆலகிராமத்து விநாயகர் சிற்பம் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like