1. Home
  2. தமிழ்நாடு

எப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும் தெரியுமா..?

1

ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் முதல்கட்டமாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 21, மே 7, மே 13 என வரிசையாக நடைபெற்று, தற்போது ஜூன 1-ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியும் மோதிக் கொள்கின்றன. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மூன்று முறை தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார். எனினும், இந்த முறை பாஜகவை வெற்றி பெற விடக்கூடாது என்ற முனைப்பில் இண்டியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், மாலை 6.30 மணிக்கு தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. பல்வேறு செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சிகள், ஏஜென்சிகள் இந்தக் கருத்துக்கணிப்புகளை வெளியிடவுள்ளன. இதனால் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Trending News

Latest News

You May Like