அமரன் ரிலீஸ் எப்போ தெரியுமா? அதிரடி அப்டேட் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!
அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் என்ற கேரக்டரில் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்து வருகின்றார். உண்மையான கதையை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை இல்லாத அளவில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கின்றார். இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகின்றார்.
எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில்,அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முன்னதாக வேட்டையன் படத்துக்கு போட்டியாக அமரன் ரிலீஸாகலாம் என்ற பேச்சு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"There lived a man who never feigned to be a hero..."
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 17, 2024
Let’s celebrate our #Amaran - #MajorMukundVaradarajan this Diwali 🙏👍
A film by @Rajkumar_KP#AmaranDiwali@ikamalhaasan #Mahendran @anbariv @gvprakash @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM… pic.twitter.com/SmeInSTUJz