1. Home
  2. தமிழ்நாடு

கடந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா ?

1

இந்தியாவில் பிரபலமான புட் ஆர்டர் தளங்களாக ஸ்விக்கு, சொமேட்டோ ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் இந்த தளங்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த பிரபலமான உணவு டெலிவரி தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான ஆஃபர்களை தொடர்ச்சியாக பல வகைகளில் தருகின்றன.

இந்நிலையில் ஸ்விக்கி நிறுவனம் நடப்பு நிதியாண்டான 2024 ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட உணவுகள் குறித்தான ஆண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதில் இருந்தும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட உணவுகள் குறித்தான விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட உணவுகளில் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரையில் பிரியாணி 83 மில்லியன் பேரால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4.6 மில்லியன் மக்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். இதன் மூலம் அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யப்பட இடங்களில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் 9.7 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்திலும், பெங்களூர் 7.7 மில்லியன் ஆர்டர்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2024-ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளில் சிக்கன் ரோல் 2.48 மில்லியன் ஆர்டர்களுடன் முதல் இடத்தினை பெற்றுள்ளது. இதில் இரண்டாம் இடத்தில் பிரியாணி சிக்கன் மோமோஸ் 1.6 மில்லியன் ஆர்டர்களுடன் உள்ளது. பொட்டேட்டோ ப்ரைஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த ஸ்நாக்ஸ் 1.3 மில்லியன் ஆர்டர்களை பெற்றுள்ளது.

மேலும், இரவு 12 முதல் 2 மணி வரையில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் சிக்கன் பர்கர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாமிடத்தில் பிரியாணி உள்ளது. அத்துடன் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சில ரயில்வே ஸ்டேஷன்களில் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனோடு (IRCTC) ஸ்விக்கி நிறுவனம் இணைந்து உணவு டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like