1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கார்டில் இருந்து ஒருவரின் பெயரை நீக்கம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

1

அரசு தரும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். 

இந்நிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம், மாற்றம் செய்ய வேண்டும் எனில் இதற்காக இனி எங்கேயும் அலைய வேண்டியது அவசியம் இல்லை, வீட்டில் இருந்தப்படி அந்த வேலையை முடித்துக் கொள்ளலாம். எனவே உங்கள் ரேஷன் அட்டையில் இருந்து உங்களது குடும்ப உருபினரின் பெயரை நீங்க வேண்டுமானால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றவும்.

பொதுவாக புதிததாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமான சென்றால் தங்களுக்கென புதிய ரேஷன் கார்டு வாங்குவற்காக பெயர் நீக்கம் செய்வார்கள். அல்லது ஒரு குடும்பத்தில் இருந்த பெண்களை வேறோரு குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் பல காரணத்துக்காக அவரின் பெயரை நீக்கம் செய்வார்கள். சரி அதனை எப்படி ஆன்லைனில் நீக்கம் செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

* முதலில் அரசின் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதன் கீழ், குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை கிளிக் செய்யவும். 
* இதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, அதன்பிறகு அதன் கீழுள்ள கேப்ட்சா என்ற எழுத்துகளை பதிவிட்டு கிளிக் செய்யவும். 
* இதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும்.
* அதில் ஏற்கனவே உங்களது குடும்ப அட்டையில் யார் யார் பெயர் உள்ளது. அவர்களது விவரம் உள்ளிட்ட பல விவரங்கள் இருக்கும்.
* அதற்கும் கீழாக குடும்ப உறுப்பினர் நீக்க என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
* இதன் பிறகு மற்ற ஆவணங்கள் என்ற பாக்ஸ் இருக்கும். அதில் இறப்பு சான்று, திருமண சான்றிதழ், தத்தெடுப்பு சான்றிதழ், இதர சான்றிதழ்கள் என இருக்கும். ஆக அவற்றில் எது உங்களுக்கு பொருத்தமானதோ, அதனை கிளிக் செய்யவும்.
* இந்த சான்றிதழுடன் (வாக்காளர் அடையாள அட்டை, சிலிண்டர் ரசீது, மின்சார கட்டண ரசீது, பான் கார்டு, வீட்டு பத்திரம், வாடகை ஒப்பந்த பத்திரம், வருமான சான்று) இதில் ஏதேனும் ஒரு ஆவணத்தினை கொடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளவும். இது 1 எம்பி அளவு இருக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like