1. Home
  2. தமிழ்நாடு

இன்று பிரேம்ஜிக்கு டும் டும் டும் - பொண்ணு பேரு என்ன தெரியுமா?

1

பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் யாரை பார்த்தாலும் ரசிகர்கள் கேட்கும் ஆஸ்தான கேள்வி “பிரேம்ஜிக்கு எப்போ கலயாணம் என்பதுதான்”. இந்த நிலையில் பிரேம்ஜி அமரனுக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கிறது என கடந்த வாரம் திருமண பத்திரிக்கையுடன் செய்தி ஒன்று வெளியானது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் எதுவும் பிரேம்ஜி தரப்பில் இருந்து வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பியின் திருமண அப்டேட்டை கொடுத்தார். அதில் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மிகவும் நெருங்கிய வட்டத்தை அழைத்து நடக்கவுள்ளதால் தங்களின் ப்ரைவஸிக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த வெங்கட் பிரபு, மணமக்களை ஆசிர்வதிக்குமாறும் அந்த அறிகையில் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருமணம் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தற்போது பிரேம்ஜி திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் இந்து சேலத்தை சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் கல்யாணம் என்று கூறப்படுகிறது. ரெண்டு காதல் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் திருத்தணியில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இந்துதான் சொல்லி இருக்கிறார். இதை அப்படியே பிரேம்ஜி வீட்டிலும் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

1

Trending News

Latest News

You May Like