எந்த நாடுகளுக்கு எவ்வளவு சதவீதம் வரி டிரம்ப் அறிவித்தார் தெரியுமா ?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்படி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இந்தியவில் இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு நாடுகளும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிகளை விதித்தும், அதேபோல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு வரிகளை விதித்து அறிவித்துள்ளார்.ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வருகிற 4 ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
இது குறித்து ஓவல் அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் அறிவித்துள்ளதாவது,
இன்றைய தினத்தை அமெரிக்காவின் விடுதலை நாள் . அமெரிக்காவை விட பிற நாடுகள் தான் அதிகமான வரிகளை விதிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. அதோடு அங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது இதனை சரிசெய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக கூடுதல் வரி என்பது விதிக்கப்படும். அமெரிக்காவின் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் அதற்கு நிகராக பிற நாடுகளுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும் இவ்வாறு டிரம்ப் கூறினார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் வர்த்தக போர் என்பது தொடங்கும் நிலை உருவாகி உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதம் வருமாறு
வியட்நாம்: 46 சதவீதம்
தைவான்:32 சதவீதம்
ஜப்பான்: 24 சதவீதம்
இந்தியா: 26 சதவீதம்
தென்கொரியா: 25 சதவீதம்
தாய்லாந்து: 26 சதவீதம்
சுவிட்சர்லாந்து: 31சதவீதம்
இந்தோனோஷியா: 32 சதவீதம்
மலேஷியா: 24 சதவீதம்
கம்போடியா: 49 சதவீதம்
பிரிட்டன்: 10 சதவீதம்
தென்ஆப்ரிக்கா: 30 சதவீதம்
பிரேசில்: 10 சதவீதம்
வங்கதேசம்: 37 சதவீதம்
சிங்கப்பூர்: 10 சதவீதம்
இஸ்ரேல்: 17 சதவீதம்
பிலிப்பைன்ஸ் 17 சதவீதம்
சீலி: 10 சதவீதம்
ஆஸ்திரேலியா: 10 சதவீதம்
பாகிஸ்தான்: 29 சதவீதம்
துருக்கி: 10 சதவீதம்
இலங்கை: 44 சதவீதம்
கொலம்பியா : 10 சதவீதம்
பெரு: 10 சதவீதம்
நிகரகுவா:36 சதவீதம்
நார்வே: 30 சதவீதம்
கோஸ்டாரிகா: 17 சதவீதம்
ஜோர்டான்: 40 சவீதம்
டொமினிக் குடியரசு: 10 சதவீதம்
யு.ஏ.இ.: 10 சதவீதம்
நியூசிலாந்து : 20 சதவீம்
அர்ஜென்டினா: 10 சதவீதம்
ஈகுவாடர்: 12 சதவீதம்
கவுமேலா: 10 சதவீதம்
ஹோண்டுரஸ்: 10 சதவீதம்
மடாகஸ்கர்: 93 சதவீதம்
மியாமனர்: 88 சதவீதம்
துனீஷிய: 55 சதவீதம்
கஜகஸ்தான்: 54 சதவீதம்
செர்பியா- 74 சதவீதம்
எகிப்து: 10 சதவீதம்
சவுதி அரேபியா- 10 சதவீதம்
எல்சல்வாடார்: 10 சதவீதம்