நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து லெஜன்ட் சரவணன் என்ன சொன்னார் தெரியுமா ?
இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. சென்னையில் நடந்த ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் லெஜெண்ட் சரவணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டில், குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனை நிச்சயம் வழங்கப்பட வேண்டும் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தக்க தீர்ப்பு வழங்கும்.ஒரு எதார்த்தமான நகைச்சுவையுடன் தான் ஹோட்டல் உரிமையாளர் பேசினார். அதில் சில கருத்துக்கள் மத்திய அமைச்சருக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவர்கள் தெரியப்படுத்தும் பொழுது தொழிலதிபர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதில் பெரிது படுத்துவதற்கு எதுவும் இல்லை.
தொழில்துறை மற்றும் சினிமா அரசியல் மூன்றும் மிக பிடித்தமானது மூன்றிலும் இணைந்து பயணிப்போம். மகாராஜா, டிமான்டி காலனி, கழுகு போன்ற படங்கள் கதையால் மக்களிடம் வரவேற்கப்படுகிறது. என்னுடைய படம் ஆக்சன் திரில்லர் திரைப்படம். விஜய் அரசியல் வந்தது குறித்து கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவும் நிலையில் சரியான கூட்டணி அமைப்பவர்களே வெற்றி பெற முடியும். தனித்து யாரும் வெற்றி பெற முடியாது. காலம் இருக்கிறது அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்னுடைய கொள்கைக்கு ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.
யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்னை பொறுத்தவரை முதல் படம் வெற்றி படம். இரண்டாவது படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் முடித்து வந்திருக்கிறார் மிகப்பெரிய வெற்றி பயணமாக முடிந்திருக்கிறது அதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் விஜய் தேடி சென்று கொண்டிருந்தார்கள். இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார். இவ்வாறு லெஜன்ட் சரவணன் தெரிவித்தார்.