1. Home
  2. தமிழ்நாடு

முருகனை வேண்டி தைப்பூச விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா ?

1

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தைப்பூச நாளில்தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்றத் துவங்கியதாகப் புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார். பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்றுதான். அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில்தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்குக் காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம்தான்.

தைப்பூசத்தன்று முருகன், சிவன், குரு பகவான் ஆகியோரை வழிபடலாம். முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம். தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.

இன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தர் கலி வெண்பா ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள், ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிக்கலாம்.

தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும், கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும், தொட்ட காரியம் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.

தைப்பூசம் அன்று முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது. நன்மைகள வந்து சேரும் என்பது ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு, சோறு ஊட்டுதல், காதுகுத்துதல், மொட்டை அடித்தல் என போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும். இந்நாளில் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே போதும் நல்லவிதமாக முடியும். எந்த தடைகளும் வராது.

Trending News

Latest News

You May Like