1. Home
  2. தமிழ்நாடு

அடிக்கடி கீரைகள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன பயன்கள் வரும் தெரியுமா ?

1

பொன்னாங்கண்ணிக் கீரை சருமத்திற்கு தங்கமான நிலத்தை தருகிறது. மற்றும் இந்த பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. பொன்னாங்கண்ணிக் கீரை கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

வெந்தயக்கீரை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊக்கத்தை அழிக்கிறது மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது. இரும்பு சத்து அதிகம் கொண்டதாக இருப்பதால் இது உடலுக்கு நல்ல பலனை தருகிறது.

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய பலன்கள் ஏராளம். அதுமட்டுமின்றி இந்தக் கீரை சுலபமாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய கீரை என்பதால் பலரும் இதை அதிகமாக விரும்புவதில்லை என்பதை உண்மை. ஆனால் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய பலன்கள் பற்றி தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக தினமும் எடுத்துக் கொள்வீர்கள் அந்த அளவிற்கு இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் முருங்கைக் கீரையை நாம் வாரத்தில் மூன்று முறை சேர்த்துக் கொள்ளலாம். மற்றும் முருங்கைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. மற்றும் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் மலச்சிக்கலை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. மற்றும் இந்த முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைத்து ரத்த சோகையையும் குறைக்கிறது. 

மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்களைக்கும் குடல் புண்களுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். 

பசலைக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும் மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை அகற்றும். அகத்திக்கீரை பித்தம் மற்றும் தலைச்சுற்றல் மயக்கம் போன்றவை வராமல் தடுக்கும். 

சிறுகீரை நரம்பு தளர்ச்சியை போக்கும் மற்றும் அதிகப்படியான பித்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. அரைக்கீரை குடல் புண்ணை குணப்படுத்தி குடலுக்கு வலிமையை தருவதோடு மட்டுமல்லாமல் தேமல் சிரங்கு சொறி போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

Trending News

Latest News

You May Like