இது தெரியுமா ? உலகின் பிரபல உணவு பட்டியல்: பரோட்டாவுக்கு 6-வது இடம்..!

உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 6-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது. வட இந்திய உணவான பரோட்டா 18-வது இடத்தையும் பிடித்துள்ளது.
டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பானது, உலகளிவில் சிறந்த ரொட்டிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் 50 சிறந்த ரொட்டிகளின் டேஸ்ட் அட்லஸின் பட்டியலில் எட்டு இந்திய வகைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் பட்டர் கார்லிக் நான் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து அமிர்தசரி குல்சா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவின் பரோட்டா ஆறாவது இடத்தையும், நான் (ஒட்டுமொத்தமாக) எட்டாவது இடத்தையும் பிடித்தது, இது முதல் 10 இடங்களில் மட்டும் மொத்தம் நான்கு இந்திய வகை ரொட்டிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பட்டியலில் பராத்தா 18வது இடத்திலும், பதுரே 26வது இடத்திலும், ஆலு நான் 28வது இடத்திலும், ரொட்டி (மொத்தமாக) 35வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் உலகளவில் பிரபலமான 8 உணவுகள் குறித்து பார்ப்போம்.