இது தெரியுமா ? ரயிலில் பெண்கள் டிக்கெட் இல்லாமலும் பயணிக்க முடியும்..!

பெண்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வாருங்கள் விரிவாக படிக்கலாம்.
இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பல சேவைகளை வழங்கி வருகின்றது.
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1981 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 139 அமலில் உள்ளது. இந்த ஆண்டில் இயற்றப்பட்ட சட்டங்கள் ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
இந்திய ரயில்வே விதிகளின் படி ரயிலில் பயணம் செய்யும் பெண்ணிடம் டிக்கெட் இல்லை என்றால் இறக்கிவிட முடியாது. பெண்கள் அவசரமான சூழ்நிலையில் பயணித்தால் டிக்கெட் இல்லாத பெண்களை பாதி வழியில் இறக்கி விட முடியாது.
1. இந்திய ரயில்வே துறை சட்டத்தின் படி ஒரு பெண் டிக்கட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணை ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடக்கூடாது. அதற்கு பதிலாக அவள் அபராதத்தை செலுத்தி விட்டு தனது பயணத்தை தொடரலாம். ஒருவேளை அந்த பெண் அபராதம் செலுத்த பணம் இல்லை என்று சொல்லினாலும் கூட டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணை ரயிலில் இருந்து ஒருபோதும் இறக்கிவிடவே கூடாது.அதன்படி ஒரு பெண் அல்லது குழந்தை ரயிலில் தனியாக டிக்கெட் இல்லாமல் இரவில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர் (TTE) அவரை ரயிலில் இருந்து இறக்க கூடாது. ஒருவேளை இறக்கிவிட்டால் சம்மந்தப்பட்ட பெண் ரயில்வே நிரவாகத்தில் புகார் செய்யலாம்.
2. ஒருவேளை பெண்ணை ரயிலிலிருந்து இறக்கி விட வேண்டுமென்றால் அங்கே ஒரு பெண் போலீஸ் அதிகாரி கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுபோல, பிரிவு 162- ன் படி, 12 வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளை தன் தாயுடன் பெண்கள் வகுப்பில் பயணிக்க அனுமதி உள்ளது. அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் பிள்ளை பெண்கள் பயணிக்கும் வகுப்பில் அனுமதி இல்லை மீறி உள்ளே நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
3. இந்திய ரயில்வே சட்டம் 1989ன் பிரிவு 311 இன் படி இராணுவ வீரர்கள் ஒருபோதும் பெண்கள் பயணிக்கும் வகுப்பில் நுழைய அனுமதி கிடையாது. அதுபோல நீண்ட தூர பயணத்தில் ஸ்லீப்பர் வகுப்பில் 6 இருக்கைகள் பெண்களுக்கு கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். மேலும் ஏசி மூன்றாம் வகுப்பில் ஆறு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பெண்களின் வயதை பொறுப்பெடுத்தாமல் இந்த சீட் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
4. முக்கியமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். ரயிலில் பெண்களை யாராவது துன்புறுத்தினால், உடனே புகார் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதற்காக நீங்கள் டிக்கெட் ஆய்வாளர் அல்லது காவல்துறை அதிகாரிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்திய ரயில்வே பக்கம் மற்றும் ரயில்வே அமைச்சரின் கணக்கை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு கூட புகார் செய்யலாம்.